வீட்டு வாசலில் வந்து தூங்கிய வாயில்லா ஜீவனுக்கு தம்பதிகள் செய்த கொடூரம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கசாராவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கயூம் கான். இவர் வசிக்கும் வீட்டின் வாசலில் அங்குள்ள நாய் ஒன்று அவ்வபோது வந்து தூங்கி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கயூம் கானும் அவரது மனைவியும் அந்த நாய் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த நாய் தெருவில் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. இதனை கண்ட நபர் ஒருவர் நாயை மீட்டு நாசிக் நகரில் உள்ள விலங்குகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் நாயின் முன்னங்கால் இரண்டும் ஒரு காதும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பீட்டா விலங்கியல் ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கயூம் கான் மற்றும் அவரது மனைவி ஆஃப்ரின் மீது விலங்குகளுக்கான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.