600 வருடங்களுக்கு முன்னர் நீயே என் காதலி..தனது மாணவியை மனோவசியம் செய்த மனோதத்துவியல் பேராசிரியர்!! நடுங்க வைக்கும் அதிர்ச்சித் தகவல்.!!

மனோதத்துவ இயல் பேராசிரியர் ஒருவர் தனது மாணவி ஒருவரை மனோவசியம் செய்த நிலையில், அதன்பின் நடந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர். வாசிம் அலட்டின். இவரது மாணவி ஒருவர் அவருக்கு இருந்த மன அழுத்தப் பிரச்சனை காரணமாக மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.மேலும் இதுகுறித்து வாசிமிற்கு தெரிய வந்த நிலையில், இதற்கெல்லாம் நீ மாத்திரைகள் எடுக்க வேண்டாம், மனோதத்துவ ரீதியில் உன்னைக் குணப்படுத்துகிறேன் எனக் கூறி தனியாக அழைத்துள்ளார்.இதை நம்பிய அந்த மாணவி, தனக்குப் பிரச்சனை தீர்ந்தால் போதும் என்ற ரீதியில், பேராசிரியர் வாசிமை தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது அந்த மாணவியை மனோவசியம் செய்த பேராசிரியர் வாசிம், அந்த மாணவி தனது கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில், அவரிடம் தவறாக நடந்து கொண்டதோடு, தவறாகவும் புகைப்படங்களை எடுத்து வைத்து கொண்டார்.

அத்தோடு, முன் ஜென்மத்தில் நானும் நீயும் காதலர்கள் என்றும், உன்னை அடைவதற்காக 600 ஆண்டுகள் காத்திருந்ததாகவும் அவர் அந்த மாணவிக்கு கூறியுள்ளார்.ஒரு கட்டத்தில் நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த மாணவி, பேராசிரியரிடம் இருந்து மீண்டு வந்தால் போதுமென முயற்சி செய்துள்ளார்.மேலும், எனக்காக ஐந்து மாணவிகள் காத்திருப்பதாகவும் கூறி மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

அதே போன்று மற்றொரு மாணவியிடம், உனக்குப் பல பிரச்சனைகள் இருக்கிறது, அதைச் சரி செய்ய உனது முழு உடலின் புகைப்படம் வேண்டுமெனக் கூறி அதையும் வாங்கியுள்ளார். இவ்வாறு மூன்று மாணவிகளை வாசிம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ஒரே ஒரு மாணவி மட்டும் தைரியமாக முன்வந்து புகாரளித்துள்ளார்.

அத்தோடு வாசிம் அலட்டின் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தான் எதையும் பாலியல் ரீதியாகச் செய்யவில்லை என விளக்கமளித்தார். ஆனால் வாசிம் அலட்டின்செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் ரீதியாகவே இருந்துள்ளது என்பதை உறுதி செய்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாக வாசிம் அலட்டினை பணிநீக்கம் செய்துள்ளது.இவ்வாறு பெண்களை வெறும் காட்சிப்பொருளாக நினைத்து, அவர்களின் உடல், உள ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி தம் எண்ணங்களை ஈடேற்றிடும் கயவர்கள் ஏராளம்.பெண்களின் அறியாமை மற்றும் அவர்களின் பிரச்சினைகளை காரணம் காட்டி பெண்களை தவறாக பயன்படுத்த முனையும் சில காம வெறியர்களும் நமது சமுகத்திலே தான் உள்ளனர்.எனவே, ஒவ்வொரு பெண்ணும் தமது பிரச்சனைகளை பிற நபரிடம் நம்பி பகிர்ந்து கொள்வதை விட்டு,தமது குடும்பத்தினருடன் கலந்து பிரச்சினைகளை தீர்த்து செயற்படுவதே எக்காலத்திலும் நன்மை தரும்