கொரொனாவின் எதிரொலி..ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை..!!

மக்கள் கூடும் வகையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானம் எடுத்துள்ளது.குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவுவதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு பொது நிகழ்வுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.பொதுக் கூட்டங்கள், சுற்றுலாக்கள், பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கூட்டமாக குழுமியிருக்கக் கூடிய நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையில், 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடக், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.