வீட்டு முற்றத்தில் திடீரென மயங்கிச் சரிந்த நபர் மரணம்..!!

தமது வீட்டு முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவம் பேலியகொடையில் இருந்து இரத்தினபுரி காவத்தை கெட்டிதென்ன பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்ற ஒருவர் வீட்டு முற்றத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த நபர் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துள்ள பிரதேசத்தில் இருந்து சென்றுள்ளதால், அவர் கொரோனா தொற்றாளரா என்பதை கண்டறிய உடல் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை ஏனைய பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பெல்மதுளை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.