யாழில் இடைவிடாத காற்றுடன் கூடிய மழை..கடந்த இரு தினங்களில் மட்டும் 58 பேர் பாதிப்பு.!! 03 வீடுகளுக்குச் சேதம்.!!

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்துவரும் நிலையில் மாவட்டத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் கூறியுள்ளார்.

கடந்த 15 ம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நல்லூர், கோப்பாய் ,தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் ,பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுஅனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளர்.