விரைவில் பாவனைக்கு வரப் போகும் கொரோனா தடுப்புசி குறித்து பிரித்தானியார்களுக்கு விடுக்கப்படும் அதிர்ச்சித் தகவல்!!

கொரோனாவுக்காக தடுப்பூசி மருந்து, பிரித்தானியாவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில். சந்தேகங்களை கோள்வியாக எழுப்பி ஊடகவியலாளர்கள் மட் ஹனக்கை துளைத்து எடுத்துள்ளார்கள். சற்று முன்னர் பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சர் ஒன்றை மட்டும் உறுதி செய்துள்ளார்.2.5 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது பிரித்தானியா வர உள்ளதாகவும்.அடுத்த வருடம் 2021 செப்டெம்பர் மாதமே, மேலதிக தடுப்பூசிகள் பிரித்தானியாவுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

66 மில்லியன் மக்கள் வசிக்கும் பிரித்தானியாவில், வெறும் 2.5 மில்லியம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவது என்பது கொரோனாவை முற்றாக தடுக்கும் நடவடிக்கைக்கு சற்றும் உதவப் போவது இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இதில் சுகாதாரத் துறை வேலை ஆட்களுக்கே முதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் நாடு தழுவிய ரீதியில் 300,000 ஆயிரம் பேர் சுகாதார துறையில் உள்ளார்கள். எல்லாம் போக வெறும் 2 மில்லியன் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.அந்த வகையில் பார்க்கப் போனால், பிரித்தானியாவில் கொரோனா தொற்று அடுத்த வரும் 2021 செப்டெம்பர் அக்டோபர் மாதம் வரை கூட தொடரலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. பல குடிமக்கள் டிசம்பர் மாதம் தடுப்பூசிகள் பிரித்தானியாவுக்கு வந்து விடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் இனி அனைவரும் மீண்டும் ஏக்கத்தில் இருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.