இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..நேற்று மட்டும் மூவர் மரணம்..!! கடந்த 16 தினங்களில் 48 பேர் பலி..!!

கொவிட் 19 தொற்றினால் நாட்டில் நேற்றைய தினம் 3 மரணங்கள் பதிவாகின.இதன்படி, கொவிட் – 19 தொற்றினால் நாட்டில் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.நீரிழிவு நோயுடன் கொவிட் -19 தொற்றுறுதியானமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம், கொழும்பு 10 ஐ சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் மரணித்தார்.

அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.சிறுநீரக மற்றும் கொவிட் 19 – தொற்றால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவரும் மரணித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மரணமானார்.நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்றே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொவிட் 19 மரணங்களே பதிவாகியிருந்தன.எனினும், கடந்த 16 நாட்களில் கொவிட்-19 தொற்றால் 48 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.