மனித உடலின் மேற்பரப்பில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உயிருடன் வாழும் கொரோனா வைரஸ்..!! ஆய்வுகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

கொரோனா வைரஸ் மூன்று தினங்கள் வரை மேற்பரப்பில் உயிருடன் இருக்கும் என்பதால், அது மனிதர்கள் மத்தியில் மிக விரைவாக பரவும் பெரிய ஆபத்து இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். வேறு வைரஸ் கிருமிகளை போல் அல்லாது கொரோனா வைரஸ் கிருமி மூன்று தினங்கள் மேற்பரப்பில் உயிருடன் இருக்கும் என்பது மிகவும் பயங்கரமான நிலைமை.இதன் காரணமாக அலுவலகங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்லாது வீடுகளை விட்டு வெளியில் இருக்கும் போது, பொருட்கள் தொடுவது மற்றும் நபர்களுடன் நெருக்கமாக இருப்பதை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.சவர்க்காரம் அல்லது கிருமி தொற்று நீக்கி திரவங்களை பயன்படுத்தி அவ்வப்போது, கைகளை கழுவுவதன் மூலம் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும்.கொரோனா வைரஸ் தண்ணீர் மற்றும் மனித கழிவுகள் மூலம் மனிதர்களின் உடல்களுக்கு செல்லும் ஆபத்து இருப்பது குறித்து எந்த ஆய்வுகளிலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உலக சுகாதார அமைப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் மருத்துவர் பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.