கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணை வெளியே துரத்திய வைத்தியர்கள்.. நடு வீதியில் குழந்தை பிறந்த அவலம்.!!

இந்தியா – காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரே மாவட்டம் வேவான் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலை ஒன்றில் அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். வைத்தியலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட போது கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா இருப்பதால், சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியர்கள் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.
பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே சிகிச்சை அளிக்குமாறு அவரது குடும்பத்தினர் கெஞ்சியும், வைத்தியர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து, அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.வைத்தியலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனைக்கு வெளியிலேயே திறந்தவெளியில் குழந்தை பிறந்ததுள்ளது.அங்கிருந்தவர்கள் போர்வைகளை வழங்கி அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவினார்கள்.அங்குள்ள சில பெண்கள் பிரசவத்துக்கு உதவி புரிந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.வைத்தியர்களின் இந்த செயலை கண்டித்து, அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இது மனிதாபிமானமற்ற செயலாகும். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் நிலைமை அறிந்தபோதிலும், கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியது கண்டனத்துக்குரியது.குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.