கொரோனாவிற்கு பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கடும் நெருக்கடி.!!

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் உரிய தீர்மானம் எடுக்கவில்லை என கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உபாலி சேதர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.அதற்கான கலந்துரையாடல் சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இந்த வாரம் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மூன்றாம் தவணை ஆரம்பத்தின் போது ஆரம்ப பாடசாலை மாணவர்களை முதலில் அழைப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முழுமையாக இன்றி ஆரம்ப பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக பேராசிரியர் உபாலி சேதர மேலும் தெரிவித்துள்ளார்.