புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…வரலாற்றுச் சாதனை நிலைநாட்டிய யாழ். ஜோன் பொஸ்கோ மாணவர்கள்..!!

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் 159 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.பாடசாலையின் கடந்த கால சித்திகளுடன் ஒப்பிடும் போது, வரலாற்றில் அதி உயர் சித்தியாக 70 வீதம் பதிவாகியுள்ளது.