பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து அமைச்சரவையில் இன்று முக்கிய ஆலோசனை..!!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சக அமைச்சரவை உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளையும் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை ஒன்லைன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் செயல்முறையை மீளாய்வு செய்வதற்கான ஒரு பொறிமுறையையும் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.மேலும், ஒன்லைன் கல்விக்கு மாணவர்கள் பங்கேற்பது குறித்த அறிக்கை அனைத்து அதிபர்கள் மூலமாகவும், மாகாண, வலயக்கல்வி மற்றும் பிரதேச கல்வி பணிப்பாளர்களிடம் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.