கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் மட்டும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.இதேவேளை, கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.