மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை நிலைநாட்டிய மாணவர்கள்.!! குவியும் பாராட்டுக்கள்.!

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியாகிய தகவலுக்கமைய 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இலங்கையில் நீண்டகாலமாக எந்தவொரு மாணவரும் 200 புள்ளிகளை பெறவில்லை எனக் சுட்டிக்காட்டப்படுகிறது.நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நடந்த பரீட்சையில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.