இலங்கையில் மிக வேகமாக அதிகரிக்கும் கொரோனா.!! இன்று மட்டும் 704 பேருக்குத் தொற்று!!

நாட்டில் இன்று மேலும் 160 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம், இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.


நாட்டில் இதுவரை 17,287 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13,788 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை, இன்று 171 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.மூன்று வெளிநாட்டினர் உட்பட 5,734 கொரோனா நோயாளிகள், நாடு முழுவதும் 52 மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 562 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.