யாழில் மாற்று வலுவுடைய குடும்பத் தலைவருக்கு நேர்ந்த சோகம்.. கதறித்துடிக்கும் குடும்ப உறவுகள்..

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் ஜெயசீலன் (வயது-54) என்பவரே உயிரிழந்தவராவார்.

மாடு பார்க்கச் சென்ற அவர், நீண்டநேரமாகியும் திரும்பிவராத நிலையில் உறவினர்கள் தேடிச்சென்றவேளை கிணற்றில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.உடனடியாகவே ஊர்காவற்றுறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.கிணற்றில் நீர்வற்றியிருந்த நிலையில் அவர் வீழ்ந்தவேளை, தலைப்பகுதி கல்லுடன் மோதுண்டு படுகாயமடைந்ததாக, அவரை மீட்டவர்கள் தெரிவித்தனர்.மாற்றுவலுவுடைய அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் எனவும் அவரது மனைவியும் மாற்றுவலுவுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.