இலங்கையில் இன்று மட்டும் 389 பேருக்கு கொரோனா தொற்று.!!

இலங்கைக்குள் இன்று மாத்திரம் 389பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாவரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583ஆக உயர்ந்துள்ளது.5206 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்துடன் 11,324 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.இதுவரை கொரோனா தொற்றினால் நாட்டில் 53பேர் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.