யாழ்ப்பாணம் – பாண்டியன் தாழ்வுப் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பண்டியன் தாழ்வு, சுண்டிகுளி, குருநகர் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் கனடாவில் இருந்து வருகை தந்த ஒருவர் பாண்டியன் தாழ்வு பகுதியில் தங்கியிருந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த மாதம் கொழும்பு சென்றிருந்த நிலையில் இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பண்டியந்தாழ்வு பகுதியில் 12 குடும்பங்கள் உட்பட கொரோனா தொற்றுக்குள்ளான நபரும்,தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.