ஊரடங்கு தளர்வு.. தனியார் துறையினருக்கு முக்கிய அறிவிப்பு.. காலை 10மணிக்கே ஆரம்பம்..!!

ஊரடங்கு தளர்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்திற்குள் அரச நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களும், ஏனைய பகுதிகளி்ல் 50 வீத ஊழியர்களும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.பாடசாலைகள், பல்கலைகழகங்கள், திரையரங்குகள், பகுதிநேர வகுப்புக்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும்.தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கே திறக்கப்பட வேண்டும்.