குடும்பங்களுக்கு இடையிலான நீண்டகாலப் பகை..யாழ் சுழிபுரத்தில் நள்ளிரவில் நடந்த கொடூரப் படுகொலை..!! இருவர் பரிதாபமாகப் பலி!!

குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் நேற்று (13) வெள்ளிக்கிழமை பின்னிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (56) மற்றும் இராசன் தேவராசா (31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.இரண்டு குடும்பங்களிற்கிடையில் நீண்டகாலமாக நிலவிய பகையே நேற்று வாள்வெட்டில் முடிந்தது.நேற்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.எனினும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.அதனால், ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் பின்னிரவில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 15 பேருக்கும் அதிகமானவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இருவரை வெட்டிச்சரித்துள்ளனர்.பொலிசார் அசமந்தமாக அந்தப் பகுதிக்கு போகாமல் விட்ட போதும், விசேட அதிரடிப்படையினர் பின்னர் துரிதமாக செயற்பட்டு, நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.வாள்வெட்டில் ஈடுபட்ட 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.மல்லாகம் நீதிவான் இன்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.