ஐரோப்பிய தேசத்திற்கு படகு மூலம் தப்பிச் சென்ற வேளையில் கோர விபத்து..74 பேர் பரிதாபமாகப் பலி.!!

லிபிய கடற்கரையான கோம்ஸில் ஏற்பட்ட படகு விபத்தில் 74 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது.

பேரழிவு தரும் சம்பவம் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்டவர்கள் படகில் இருந்ததாக தெரியவந்துள்ளது.மீட்பு நடவடிக்கை தொடரும் போது கடலோர காவல்படையினரும் மீனவர்களும் தப்பிய 47பேரை மீண்டும் கரைக்கு அழைத்து வந்ததாக ஐஓஎம் கூறுகிறது.கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மத்திய மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட எட்டாவது கப்பல் விபத்து இதுவாகும்.கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 780பேர் இத்தாலி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். 1,90 பேர் வழியில் மறிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த ஆண்டில், ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகளில் 900பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.