கொழும்பு கல்கிஸை வீதியில் வீழ்ந்து மரணித்த வயோதிபர்.!!

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் காலி வீதிக்கு அருகிலுள்ள வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மபாலராம பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பீசீஆர் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.