தீபாவளிக்கு புத்தாடை வாங்கப் போன புதுமணத் தம்பதியிடம் கைவரிசையைக் காட்டிய கில்லாடிகள்!!

தீபாவளிக்கு புத்தாடை வாங்க சென்ற புதுமணத் தம்பதிகளிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.நேற்று (12) மாலை நெல்லியடி, இரும்புமதவடிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக நெல்லியடி நகரில் புடவை வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமண தம்பதியிடமே திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.நெல்லியடியில் இருந்து மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகளை, இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர், ஆள் நடமாட்டமற்ற இரும்பு மதவடிப்பகுதியில் வைத்து பெண்ணின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பித்துள்ளனர்.