சுகாதார விதிமுறைகளை மீறி முன் அனுமதி பெறாமல் திருமண நிகழ்வை நடத்த அனுமதித்த யாழ் நகர பிரபல ஹொட்டலுக்கு சீல்..!!

யாழ்.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அனுமதி பெறாமல் திருமண நிகழ்வு நடத்துவதற்கு அனுமதித்ததான குற்றச்சாட்டில் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பேணுவதற்காக திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவின் முன் அனுமதியை பெறவேண்டும்.எனினும், முன் அனுமதியைப் பெறாமல், திருமண நிகழ்வை நடத்துவதற்கு இடமளித்ததாக குறித்த ஹோட்டல் நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஹோட்டல் பூட்டப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட செயலகத்தில் நுாற்றுக்கணக்கானவர்கள் எந்தவொரு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பேணாமல் கூடியபோது, வேடிக்கை பார்த்த யாழ்.மாநகர சுகாதாரப் பிரிவுக்கு, திருமண நிகழ்வு நடத்தியது பாரிய சுகாதார பாதுகாப்பு விதி மீறலாக தொிந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.