வீட்டிலிருந்தே தீபாவளி..களையிழந்து போன யாழ் நகரம்!! வெறிச் சோடிப்போன வீதிகள்.!!

நாளை இந்துக்களின் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், யாழ் நகரப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம், பொருள் கொள்வனவு குறைவாக காணப்படுகின்றது. வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ் நகரம் நிரம்பி வழிவது வழக்கம். ஆனால், இன்று யாழ் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக வீடுகளிலிருந்து தீபாவளியை கொண்டாடுமாறு சுகாதாரப் பிரிவினர் மற்றும் மதத் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தீபாவளி வியாபாரம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்காடி வியாபாரம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக, ஏற்கனவே யாழ் மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.