அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தில்லு முல்லு வதந்தி..அதிபர் ட்ரம்ப்பிற்கு இடியாக விழுந்த செய்தி..!!

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக ஜனாதிபதி டிரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் பலர் வெறும் வதந்தி எனப் புறந்தள்ளியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் சிக்கவில்லை எனவும், தில்லு முல்லு நடக்கும் வாய்ப்புகள் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.மேலும், அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பாக நடந்த ஜனாதிபதி தேர்தல் இதுவெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு முகமைகள் மற்றும் மாகாணங்களின் தேர்தல் அதிகாரிகளின் சங்கங்கள் கூட்டாட வியாழனன்று இந்த விவகாரம் தொடர்பில் கூட்டாக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கையின்போது மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள சில மாவட்டங்களில் ஏற்பட்ட சிக்கல்களால் வதந்திகள் கிளம்பின.ஆனால், அவை அனைத்தும் மனிதர்களால் ஏற்பட்ட பிழையே அன்றி, மென்பொருளால் ஏற்பட்டதல்ல எனவும், அவை அனைத்தும் உடனடியாக கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டதாகவும் உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஜார்ஜியாவில் மென்பொருள் புதுப்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் சில எண்ணும் கணினிகள் இடைநிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்னும் மறுத்து வரும் நிலையில், பாரிய தேர்தல் மோசடி பற்றி அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.மேலும் பல்வேறு மாகாணங்களில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கு எதிராக டிரம்ப் தரப்பினர் வழக்குத் தொடுத்திருந்தாலும், இதுவரை அவர்களால் உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.