26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வகை வெளிர் சிவப்பு வைரக்கல்!

சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வகை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல், 14.83 காரட் எடை கொண்டது.16 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஆரம்பமான ஏலம் 21 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலை போயுள்ளது.அத்தோடு ஏல நிறுவனத்துக்கு சேர வேண்டிய கொடுப்பனவையும் சேர்த்து 26.6 மில்லியனுக்கு ஒருவர் வாங்கியுள்ளார்.அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப வைரக்கல்லை வாங்கியவரின் விபரத்தை ஏலம் விட்ட நிறுவனமான SOTHEBY வெளியிடவில்லை.