அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.. ஒன்று சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள்..!! செட்டிக்குளத்தில் தோற்கடிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் பட்ஜெட்!!!

இப்போதாவது தமிழ்க் கட்சிகள் முக்கிய விடயங்களல் ஒன்று சேர்ந்து செயற்பட ஆரம்பித்திருப்பது நல்லதொரு ஆரம்பம் என பொதுமக்கள் கூறுகிறார்கள். அரசாங்க கட்சிகளுக்கு எதிராக அரச எதிர்ப்பு பேராட்டங்களில் மட்டுமல்லாமல் பொதுவான அனைத்து விடயங்களிலும் தமிழ்க் கட்சிகள் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளமை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு நல்லதொரு பலம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இது தான் என்பதை, தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கபட்ட செய்தியே இது.

வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபையின் பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது.சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியில் உள்ள வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபையின் 2021 வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.17 உறுப்பினர்களைக் கொண்ட வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபையில் ஒரு உறுப்பினர் அமர்விற்கு வருகை தராத நிலையில், வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக எதிர்த்து வாக்களித்தன.