யாழ் உரும்பிராய் பிரதேசத்திலுள்ள இளம் தொழில் முயற்சியாளர் ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு.!! இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா..?

உலகில் பெரும்பாலான மக்கள் தாம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெற்றுக் கொண்ட எந்தவொரு பொருளையும் எவருக்கும் இலவசமாக கொடுக்க முன்வருவதில்லை.மாறாக எவற்றிலும் கொள்ளை லாபம் பெறவே முனைவார்கள்.மிகச் சிலரே தமது உழைப்பில் பெற்றுக் கொண்டவற்றை ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்குவார்கள். இவ்வாறான ஒருவர் குறித்தே இந்தப் பதிவு.

எமது நாட்டிலும் பல செல்வந்தர்கள் இருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் தானதர்மங்களில் ஈடுபடுகின்றனர் என்பது கேள்விக்குறியே.இவ்வுலகில் தமது உழைப்பில் கிடைத்த சிறியளவு பணத்தையோ அல்லது பொருட்களையோ, முழு விருப்பத்துடன் ஏழை மக்களுக்கு வழங்கும் உத்தமர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரே எமது சமூகத்திற்கு ஒர் முன்மாதியான நற்செயல்களில் ஈடுபட்டு சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கின்றனர்.

ஆம்.யாழ் உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள இளம் தொழில் முயற்சியாளர் ஒருவர் எமது சமூகத்திற்கு முன்மாதிரியான செயல் ஒன்றைச் செய்ய முன்வந்துள்ளார்.யாழ் உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தொழில் முயற்சியாளரான சுதாகரன் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த, மிகவும் நல்ல நிலையில் உள்ள 200 கிலோ கிராம் நிறையுடைய பப்பாளிப் பழங்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.இது குறித்த அறிவிப்பை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, உரும்பிராய் பிரதேசத்திலுள்ள ஆதரவற்ற சிறார்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் கருணை இல்லம் மற்றும் முதியோர் இல்லங்கள் தன்னுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில், தேவையான பப்பாளிப் பழங்களை நேரில் கொண்டு வந்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே, ஆர்வமுள்ள அனைவரும் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் ஊடாக, உங்களுக்கு தேவையான பப்பாளிப் பழங்களை முற்றிலும் இலவமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு: 077 0349745

இந்த இளம் தொழில் முயற்சியாளரின் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்க போற்றத்தக்க விடயமாக அமைவதோடு அவர் தனது இது போன்ற நற்பணிகளை மென்மேலும் மேற்கொள்ள இறைவன் எப்போதும் துணைபுரியவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.