இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் இருவர் மரணம்..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு 12ஐ சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவரும், மீகொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மற்றுமொரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.