வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக மீட்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு பத்திரமாக மீட்கப்பட்டது.

நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் கட்டிமா என்ற கிராமத்தில் வயல்வெளியில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது துணியில் சுற்றப்பட்டு, மண்ணுக்குள் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில், பிறந்து சில மணி நேரங்களேயான சிசு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் அந்தச் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.