ரயில் பயணிகளின் கவனத்திற்கு…மேல் மாகாணத்திற்கு வெளியில் இடம்பெறும் ரயில் சேவைகள் குறித்த விபரங்கள் அறிவிப்பு.!

மேல் மாகாணத்திற்கு வெளியே இடம்பெறும் ரயில் சேவைகளின் விபரங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியத்த, கண்டி, மாஹவ, புத்தளம், அவிஸ்சாவளை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் அதே இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதுடன், இந்த ரயில் பாதைகளில் செல்லும் ரயில்களுக்கு இன்று காலை கொழும்புகோட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.மாலை செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மேல் மாகாண எல்லை பகுதியில் அமைந்துள்ள இறுதி ரயில் நிலையங்களான அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிஸ்சாவளை வரையில் மாத்திரம் கொழும்பில் இருந்து பயணிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் இதற்கு அப்பால் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது. அத்தோடு செல்லும் ரயில்கள் அடுத்துவரும் ரயில் நிலையத்திலிருந்து ரயில் பயணிகளால் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதேச ரீதியிலான ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவையில் ஈடுபடும்.