பெண்களை அதிகமாக தாக்கும் கருப்பை புற்றுநோய்.!! அவசியம் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.!!

உலகிலேயே அதிகளவில் மனித உடம்பிலிருந்து அகற்றப்படும் உறுப்பு எது தெரியுமா ? கையோ,கால்களோ கிட்னியோ அல்ல பெண்களின் கர்பப்பை தான் உலகிலேயே அதிகளவில் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்படும் உறுப்பு ஆகும் இதனை ஹிஸ்டணெரக்டமி’ (Hysterectomy)) என்பர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தால் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்று நோயும் ஒரு காரணமாகும்.ஏதோ ஒரு காரணத்திற்காகக் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வதில்லை. சரியாகச் செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன.


கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள்பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளைப் பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாகப் பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. இவைத்தவிர, பெண்கள் புகை பிடித்தாலும், 15 வயதிற்கு முன்னரே உடலுறவில் ஈடுபட்டாலோ, கணவருக்குப் பலப் பெண்களுடன் தொடர்பு இருந்தாலோ, பெண்களுக்குக் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் ஏற்படும். குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப் பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோரும் கருப்பை புற்று நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. இது நான்கு கட்டமாக வளர்ச்சி அடைகின்றது. ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்டால்,ஈளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாய் முடியலாமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முதல் கட்டம்-கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.,இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ+ம்,பெலோபியன் குழாய்கள்.மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உதாரணம்-பெல்விஸ் பகுதிகள்.,நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உதாரணம்- சிறுநீரகம்,கல்லீரல் ஆகியன.உலக அளவில் மரணத்தை விளைவிக்கும் முக்கியக் காரணி புற்று நோய் ஆகும். வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆண்களும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு,பெண்களும்,அதிகம் ஆளாவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.