இலங்கையின் பிரபல தமிழ் வானொலிப் பணியாளர்களுக்கு கொரோனா!!

இலங்கையின் தனியார் தமிழ் வானொலியின் அறிவிப்பாளர்கள் இருவர் உட்பட அங்கு பணியாற்றும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வானொலி நிறுவனத்தின் தமிழ், சிங்கள வானொலிக் குழுமங்களில் பணியாற்றும் 60 பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் ஆண்கள் நால்வருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அறிவிப்பாளர்களான இருவரும் கொழும்பில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றி வருகின்றார்கள்.இதேவேளை, அந்த நிறுவனத்தின் நூலகம் அல்லது ஆவணக் காப்பகத்தில்பணியாற்றும் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் சிங்களவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.இதேவேளை, தமிழ், சிங்கள ஊடகங்களைச் சேர்ந்த நாடாளுமன்றச் செய்தியாளர்கள் ஐவருக்கு ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.