தமக்கும் பிசிஆர் சோதனை செய்யக் கோரி கூரையில் ஏறி போராட்டம் நடத்தும் சிறைக் கைதிகள்.!!

பழைய போகம்பரை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், தம்மை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்துமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.போகம்பரை சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறார்கள்.பழைய போகம்பரை சிறைச்சாலையில் 800 கைதிகள் தங்கியுள்ளனர்.முப்பது கைதிகள் மற்றும் இரண்டு அதிகாரிகள் போகம்பரை சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.