இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக உயிரிழந்தவர்கள் கொழும்பு 11 ஐ சேர்ந்த 40 வயது ஆண் என்றும் மற்றுமொருவர் களனிப் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று இத்துடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம் ஐந்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை இன்று மாத்திரம் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 646 பேர் குணமாகிவீடுகளுக்கு திரும்பியதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில்கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10183ஆக உயர்ந்துள்ளது.