அமெரிக்காவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி..மகாராணியிலிருந்து பாமரமக்கள் வரை ஒரே சட்டம்..!! பிரித்தானிய சுகாதாரத் துறையின் அதிரடி..!!

பிரித்தானியாவுக்கு அடுத்த மாதம், அமெரிக்காவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி வர உள்ள நிலையில். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அதனை உடனே வழங்க முடியாது என்றும். பிரித்தானிய மகாராணி தொடக்கம். அன் நாட்டு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வரை காத்திருந்தே தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் சுகாதார துறை அறிவித்துள்ளது.

சட்டம் என்றால் அது அனைவருக்கு சமமாக செல்லுபடியாகும் நாடுகள் வரிசையில் பிரித்தானியா முதன்மை இடத்தை வகிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.டிசம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு வரவுள்ள, கொரோனா தடுப்பு ஊசிகள் முதலில் என்.எச்.எஸ் பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது.பின்னர் சுகாதார சேவையில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும். பின்னர் படிப்படியாக வயதான மற்றும் அடிப்படையில் வேறு நோய் தாக்கம் உள்ள நபர்களுக்கு கொடுக்கப்படும் என்றும். செல்வந்தர்கள் இந்த மருத்தை குறுக்கு வழியில் பெற்றுக் கொள்ள முடியாதவாறு நடைமுறை கொண்டுவரப்படும் எனவும் பிரித்தானிய சுகாதார துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது.