ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜோ பிடன் பிரபல தமிழ் பெண் மருத்துவருக்கு கொடுத்த உயரிய அங்கீகாரம்..!!

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரின் தேர்தல் வாக்குறுதிப்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஜோ பைடன் நியமித்துள்ள குழுவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் வைத்தியர் செலின் கவுன்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை 13 பேர் அடங்கிய இக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் விவேக் மூர்த்தி மற்றும் வைத்தியர் அதுல் கவாண்டே ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.வைத்தியர் செலின் கவுண்டர் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலையம் கிராமத்தை சேர்ந்த ராஜ் நடராஜன் கவுண்டர் என்பவரின் மகளாவார்.இவர் நோய்த் தொற்று அறிவியல் பாட பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்று நியூஜோர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.