கொழும்பில் வாழும் ஆறு இலட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!

கொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவர் றுவன் விஜயமுணி தெரிவித்துள்ளார்.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட 400 பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனடிப்படையில் அண்ணளவாக நூற்றுக்கு 5 வீதமாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 30 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றுடன் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த தொற்றாளர்களிடமிருந்து தொற்றுப் பரவுகின்றதா அல்லது உடலிலே உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.