கொரோனா கொடூரத்தினால் உயிரிழந்த அம்மா!! ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்து இறுதிச் சடங்கு செய்யப் போகும் மகள்..

பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவரது மகளான இங்கிலாந்து சுகாதாரத்துறை தாதி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மகள் குணமடைந்து வந்து தாயாரின் இறுதிக்கிரியை நடத்துவார் என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக உயிரிழந்த தாயாரின் உடல் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிக செலவாகும் நிலையில், இணையத்தளம் ஊடாக நிதி திரட்டும் GoFundMe பிரச்சாரத்தை, தாதியின் நண்பர்கள் ஆரம்பித்துள்ளனர்.பிரித்தானியாவின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் நகரில் வசித்து வந்தவர், அனுசுயா சந்திரமோகன். இவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அவரது மகளான ஜெனிபர் நோர்போக்கின் கிங்ஸ் லினில் உள்ள குயின் எலிசபெத் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றுகிறார். அவரும் கொரொனாவினால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜில் உள்ள ரோயல் பொப்வொர்த் வைத்தியசாலையில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
இறந்த தாயாரின் இறுதிக்கிரியை நடத்த, ஜெனிபர் குணமடைந்து வருவார் என அவரது உறவினர்கள் விரும்புகிறார்கள். இதற்காக இறந்தவரின் உடலை பிரேத அறையில் பத்திரப்படுத்தி வருகிறார்கள்.இதற்காக நிதி திரட்டும் பக்கமொன்றை ஆரம்பித்து, உதவி கோரியுள்ளனர். 15,000 பவுண்ஸ் நிதி சேகரிக்க எதிர்பார்த்துள்ளனர்.அனுசுயா மற்றும் ஜெனிபர் இந்திய பூர்வீகத்தை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.