இலங்கையில் மீண்டும் நுழைந்துள்ள கடும்போக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்.?? சர்வதேச ஊடகத்தின் பரபரப்புத் தகவல்.!

தீவிர கடும்போக்குடைய கொள்கைகளைக் கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கலீபாக்களினால் ஆட்சி செய்யப்படும் இஸ்லாமிய தேசமாக ஐ.எஸ் தீவிரவாதிகளினால் உருவகிக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்ததனைத் தொடர்ந்து இவ்வாறு கடும்போக்குடைய தீவிரவாதிகள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் தெரிவிக்கின்றது.கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கலிபா ஆட்சி வீழ்ச்சியைத் தொடர்ந்தும் அந்த அமைப்பு கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் மொஸாம்பிக்கில் 50ற்க்கும் மேற்பட்ட கிராம மக்களை கொடூரமான முறையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.