ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50 பேரை தலைகீழாக தொங்கவிட்டு வெட்டிக்கொலை செய்த பயங்கரவாதிகள்.!!

வடக்கு மொசாம்பிக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சேர்ந்த 50 பேரை தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

கபே டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். அப்போது அலறி அடித்து ஓடியவர்களை பிடித்துக் கொண்டு போய் கால்பந்து மைதானத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர்.பின்னர் கிராம மக்கள் 50 பேரின் கழுத்தை அறுத்து வெட்டிக்கொலை செய்துள்ளனர் பயங்காரவாதிகள். இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த காபோ டெல்கடோ மாகாணத்தில் கடந்த 2017 முதல் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், அங்கு ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். பலரும் தங்கள் வீடுகளை இழந்து வறுமையில் வாடுகிறார்கள்.