பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இசட் புள்ளி மீளாய்வு..!! கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்..!!

2019ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலான இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெற்கு ஊடகமொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இசட் புள்ளிகளை மீள மதிப்பீடு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இசட் புள்ளி வெளியீட்டுடன் புதிய மற்றும் பழைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியர் தங்களது அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து குறித்த இசட் புள்ளிகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.புதிய பாடத் திட்டம், பழைய பாடத் திட்டம் என்பனவற்றில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான இசட் புள்ளி வழங்கும் போது, எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாக பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.