இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!! இன்று மட்டும் ஐவர் பலி.!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும், மேலும் அவர் புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றினால் இன்று பதிவான ஐந்தாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.