இலங்கையில் கோரத் தாண்டமாடும் கொரோனா..!! மரணங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 51 வயதுடைய ராஜகிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவராகும். கடந்த 7ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட சுவாச கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.கம்பஹா உடுகம்பல பிரதேசத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.இதேவேளை, 55 – 60 வயதிற்குட்பட்ட அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு கொரோனா தொற்றியமையே காரணமாகும்.அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 40 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.