இலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் பயணம்…ரயில் பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்பற்ற ரயில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய தலைவர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தினர் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார முறையானது ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது எங்கள் சங்கத்தினால் நிர்வாகத்தினருக்கு பல்வேறு சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. எனினும் எங்கள் யோசனைகளை ரயில் நிர்வாகத்தினர் கண்டுக்கொள்ளவில்லை.கொரோனா பரவலுக்கு மத்தியில் நேற்றைய தினம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் உரிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தவில்லை.புதிய தொழில்நுட்பத்தில் ரயில் டிக்கட் ஒதுக்கிக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை எங்கள் சங்கம் அறிமுகப்படுத்தி வைத்தது. எனினும் அதனையும் பின்பற்றவில்லை.உரிய முறையில் கிறுமி நீக்கம் செய்யும் நடைமுறை ஒன்று பின்பற்றவில்லை. பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கு போதுமான குழுவொன்று இல்லை.இந்த நிலைமைக்கு மத்தியிலான ரயில் பயணம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.