உலக மக்களின் நெஞ்சில் பால் வார்த்த மருத்துவத் தம்பதிகள்.!! கொரோனாக்கு மருந்து தயார்.!!

ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மற்றும் தமது வாழ் நாளில் பல வருடங்களாக மருந்துகளை கண்டு பிடிக்கவே செலவிட்டு வரும் தம்பதிகள் தான் இவர்கள். ஊகார் ஷாகின் அவரது மனைவி ஓசிலம் ஆகிய இருவரும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசி ஒன்றை கண்டு பிடித்துள்ளார்கள்.இனி அடுத்த 2 வருடங்களுக்கு இந்த மருந்தை தான் நீங்கள் அதிகம் பார்க்க உள்ளீர்கள். இது எவ்வாறு வேலை செய்கிறது?
கொரோனா வைரசில் உள்ள டி.என்.ஏ இன் பிரதிகளை இந்த விஞ்ஞானிகள் பிரித்து எடுத்து உள்ளார்கள். அதுவே மனித உடலில் புகுந்ததும் ஒருவகையான புரதசத்தை உருவாக்கி, செல்களுக்கு உள்ளே செல்ல வழி வகுக்கும்.இந்த டி.என்.ஏ பிரதிகளை மனித உடலில் செலுத்தும் போது. மனித உடல் உடனே ஒரு வைரஸ் வந்திருப்பதாக உணர்ந்து. அதனை அழிக்கும் திரவங்களை வெளியிடும். ஆனால் உடலில் கொரோனா வைரஸ் இருக்காது. இருப்பினும் கொரோனா வைரசுக்கான, எதிர்ப்பாற்றல் உடலில் தோன்றிவிடும்.
பின்னர் உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டால் கூட, எமது உடலுக்கு தெரியும் எப்படி அதனை அழிக்க வேண்டும் என்று. அந்த 14 நாட்கள் எமது உடலுக்கு தேவை இல்லை. ஜேர்மன் கம்பெனியான பயோ டெக்கில் வேலை பார்த்த இந்த தம்பதிகள் கண்டு பிடித்துள்ள எதிர்ப்பு மருந்து.90 சதவிகிதம் சக்தி வாய்ந்தது. இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. சுமார் 1 மில்லியன் மருந்துகளை பெற்றுக் கொள்ள, பிரித்தானிய அரசு தற்போது குறித்த ஜேர்மன் நிலையத்தோடு தொடர்பு கொண்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.வெறும் 14 மில்லியன் பெறுமதியான இந்த பயோ டெக் என்ற கம்பெனியின் பங்கு இன்று 45 பில்லியன் டாலருக்கு எகிறியுள்ளது.