இலங்கையில் முதல் முறையாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,000 ஐயும் கடந்தது..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.


அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 657 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக காணப்படுகின்றது.இதில், 4 ஆயிரத்து 712 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 419 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.