இப்படியும் நடக்கின்றது..வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டியில் மதுபான விருந்து.!! வசமாக மாட்டிய கொரோனா நோயாளிகள்!!

கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மூவர், நோயாளர் காவு வண்டிக்குள்ளேயே மதுபான விருந்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அண்மையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன.நீர்கொழும்பிலிருந்து கடவத்தைக்கு அழைத்து செல்லப்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பை சேர்ந்த மூன்று பேர் அண்மையில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, அவர்கள் ஒரு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று பேரும் மதுப்பாவனைக்கு அடிமையானவர்கள். கொரோனா சிகிச்சைக்கு சென்றால் மது அருந்த முடியாது என்பதால், சில போத்தல் மதுபானத்தை வாங்கி தங்கள் உடைமைகளில் மறைத்து வைத்தனர்.நோயாளர் காவு வண்டியில் அவர்கள் ஏற்றப்பட்டு காவத்தைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நோயாளர் காவு வண்டியின் பின பகுதியில் கொரோனா நோயாளர்கள் மட்டும் இருப்பார்கள். வாகனத்தின் முன்பகுதியில் சுகாதார பிரிவினர் செல்வார்கள்.செல்லும் வழியில், தம்மிடமிருந்த மதுபானத்தை அருந்தலாமென முடிவு செய்தவர்கள், நோயாளர் காவு வண்டிக்குள்ளேயே மதுபானம் அருந்த தொடங்கினர்.கடவத்தை பகுதியில் நோயாளர் காவு வண்டி நிறுத்தப்பட்டது. உதவியாளர் வந்து ஆம்புலன்சின் கதவைத் திறந்துள்ளார்.இதன்போது, மூவரும் போதையின் உச்சத்தில் அரை மயக்கத்தில் இருந்துள்ளனர். அவர்களால் நோயாளர் காவு வண்டியிலிருந்து இறங்க முடியவில்லை.பின்னர், வைத்தியசாலை ஊழியர்களால் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அவர்கள் இறக்கப்பட்டனர்.