நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 356 கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரங்கள்.!!

இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 356 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 193 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 99 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 28 பேர் களுத்துறை மாவட்டத்தையும் என்றும் 08 பேர் இரத்தினபுரி மாவட்டத்தையும் 07 பேர் காந்தியையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் மட்டக்களப்பைச் சேர்ந்த 06 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 04 பேரும் மாத்தறையில் 03 பேரும் காலியில் 02 பேரும் காணப்பட்டுள்ளனர்.அத்தோடு போகம்பற சிறைச்சாலையில் இருவரும் அனுராதபுரம், புத்தளம் மற்றும் திருகோணமலையில் தலா ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.